×

ஒரு பாடகியின் கதை!

ஹீரோ, ஹீரோயின் இருவரில் யாருக்காவது உடல் ரீதியாக பிரச்சனை என்றால் அந்தப் படத்துக்கு தனிக் கவனம் கிடைப்பதுண்டு. இயக்குநர்களும் படம் பேசப்பட வேண்டும் என்று இது போன்று கதை எழுதுவதுண்டு. அந்த வரிசையில் ஹீரோயின் காது கேளாதவராக வருவதுபோல் ‘மாருதம்’ படத்தை இயக்கிவருகிறார் சினிமாவில் நீண்ட அனுபவமுள்ள ஆர்.இளமாறன்.

இந்தப் படத்தை பவி கிரியேஷன்ஸ் சார்பில் சதாமுருகன் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு சந்திரன் சாமி. இசை சாமுவேல் தேவநேசன். இதில் நாயகியாக சிவாநந்தினி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ஜீவா, அர்ஜுன், ரவி, ராமசாமி, ரூபா, சத்யா, அன்புமணி, பேபி தர்ஷினி, பேபி சின்ட்ரெல்லா ஆகியோர் நடித்துள்ளனர்.

 காது கேளாத பிறவிக் குறைபாடு உள்ள ஒரு பெண் முதன்மைப் பாடகியாக எவ்வாறு உருவாகிறாள், எப்படி உருவாக்கப்படுகிறாள், அதற்காக எத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்கிறாள் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம்  உருவாகியுள்ளதாம்.இதன் படப்பிடிப்பை நாமக்கல், பரமத்தி வேலூர், ஈரோடு, கோபி ஆகிய இடங்களில் 45 நாட்களில் முடித்துள்ளார்களாம்.

Tags : singer ,
× RELATED ‘மக்கள் பாடகர்’ கத்தார் மறைவு