×

மியான்மர், கம்போடியாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவு துறை தகவல்

புதுடெல்லி: மியான்மர், கம்போடியா விற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்கப்பட்டதாக வெளியுறவு துறை தெரி வித்துள்ளது.  இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நிருபர்களிடம் கூறுகையில், ‘மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு வேலை நிமித்தமாக சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில்  200 பேர் மியான்மரிலிருந்தும், 100 பேர் கம்போடியாவிலிருந்தும், 64 பேர்  லாவோஸிலிருந்தும் மீட்கப்பட்டனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்கிறது. தாய்லாந்தில் சிலர் போலீஸ் காவலில் உள்ளதால், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்திய தூதரகம் ஈடுபட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி, சட்டவிரோதமான முறையில் அவர்களை அனுப்பி வைக்கும் ஏஜென்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுலா விசா எடுத்து அவர்களை அனுப்பி வைக்கின்றனர். விசா காலம் முடிந்தவுடன், அவர்கள் அங்கே சிக்கிக் கொள்கின்றனர். கத்தாரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்….

The post மியான்மர், கம்போடியாவிற்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்ட 350 இந்தியர்கள் மீட்பு; வெளியுறவு துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Myanmar, Cambodia ,New Delhi ,Ministry of External Affairs ,Indians ,Myanmar ,Cambodia ,Indian Foreign Affairs ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீன் கேட்ட வழக்கில்...