×

புதுப்பேட்டை 2ம் பாகம்; செல்வராகவன் தகவல்

சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே  என்ற படத்தை இயக்கிய செல்வராகவன், இதற்குமுன் சந்தானத்தை வைத்து மன்னவன் வந்தானடி, எஸ்.ஜே.சூர்யாவை வைத்து நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் அவர் அடுத்து இயக்கும் படம், ஆயிரத்தில் ஒருவன் 2 என்று தகவல் வெளியானது.

ஆனால், இதை அவர் மறுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய செல்வராகவன், விரைவில் புதுப்பேட்டை படத்தின் 2ம் பாகத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் தனுஷ் நடிப்பார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்குமுன் அவரும், தனுஷும் இணைந்த புதுப்பேட்டை படம், 2006 மே மாதம் திரைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அமெரிக்காவில் தயாரான தமிழ்த் திரைப்படம் “தி வெர்டிக்ட்” !!