×

6 பெயர்கள் பரிந்துரை பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை யார்? பிரதமர் நாளை அறிவிக்கிறார்

இஸ்லாமாபாத்: “பாகிஸ்தான் புதிய ராணுவ தலைமை தளபதி பிரதமர் ஷெபாஸ் நாளை துருக்கி செல்வதற்கு முன் நியமிக்கப்படுவார்,’’ என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவித் பஜ்வாவின் பதவிக்காலம் வரும் 29ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய தலைமை தளபதி நியமனம் குறித்து பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் தனது சகோதரரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரிப்பை லண்டனில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவத் தலைமை தளபதி மற்றும் கூட்டு முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கான பெயர்களை பாதுகாப்பு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. இந்த பட்டியலில் அசிம் முனீர், ஷாகிர் ஷம்ஷாத் மிர்சா, அஜார் அப்பாஸ், நவுமன் மெகமூத், பாயிஸ் ஹமீத், முகமது அமீர் உள்ளிட்ட 6 லெப்டினன்ட் ஜெனரல் பெயர்கள் இடம் பெற்றிருக்க கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. புதிய ராணுவ தளபதியை பிரதமர் ஷெபாஸ் நாளை அறிவிக்க உள்ளார். …

The post 6 பெயர்கள் பரிந்துரை பாகிஸ்தானின் புதிய ராணுவ தலைமை யார்? பிரதமர் நாளை அறிவிக்கிறார் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,Islamabad ,Shebaz ,Turkey ,Dinakaran ,
× RELATED பாக்.கிற்கு உருவாக்கிய முதல் நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்தது சீனா