×

டைரக்‌ஷன் படிக்க அமெரிக்கா செல்லும் பார்வதி

பூ, மரியான் படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு டைரக்‌ஷன் ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தான் நடிக்கும் மலையாள படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். இதன் மூலம் டைரக்‌ஷன் தொடர்பான நுணுக்கங்களை அவர் அறிந்துகொண்டார். இந்நிலையில் டைரக்‌ஷன் தொடர்பான கோர்ஸும் படிக்க அவர் விரும்பினார்.

அதற்காக விரைவில் அமெரிக்கா செல்கிறார். இதனால் மலையாளத்தில் நடிக்க வந்த 2 படங்களின் வாய்ப்புகளையும் ஏற்க அவர் மறுத்துவிட்டார். அமெரிக்காவில் 6 மாதங்கள் தங்கியிருந்து டைரக்‌ஷன் கற்க அவர் முடிவு செய்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் மலையாளத்தில் ஒரு படத்தை இயக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Tags : Parvati ,America ,
× RELATED கோடை காலத்தில் கொரோனா பரவல் பரவாது...