×

‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் கவனம் தேவை: மருத்துவர் எச்சரிக்கை

பெரம்பூர்: ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறையில், பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் கவனம் தேவை என மருத்துவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண்கண்ட தெய்வம், கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன், இவையெல்லாம் நம் கலாச்சாரம் மிகுந்த நாட்டில் பின்பற்றப்பட்ட வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறைகளை தழுவியே பழமொழிகளும் எழுதப்பட்டன. நமது முன்னோர்கள் அவ்வாறு வாழ்ந்து விட்டு சென்றனர். அந்த காலத்தில் கணவன் உயிரிழந்து விட்டால் மனைவி உடன் கட்டை ஏறி தனது உயிரை மாய்த்துக் கொள்வார். அவ்வாறு வாழ்ந்த நமது முன்னோர்கள் நாகரிக வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி கல்வி அறிவு போன்ற மாற்றங்களினால் தங்களை மாற்றிக் கொண்டே வந்தனர். ஒவ்வொரு காலகட்டத்திலும், மாற்றங்கள் மாறாமல் தொடர்ந்து வந்தன. தற்போது அந்த மாற்றம் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம்  நடத்தலாம் என்ற ஒரு கட்டத்தில் வந்து நிற்கிறது.இதற்கு, ‘லிவிங் டு கெதர்’ என்ற இந்த கலாச்சாரம் எங்கிருந்து வந்தது என ஆராய்ந்தால் எந்த ஒரு கலாச்சாரமாக இருந்தாலும் மேற்கத்திய நாடுகளில் வந்து, அதன் பின்னர் 20 ஆண்டுகள் கழித்து நமது நாட்டில் அது பற்றி பேசுவார்கள். இதெல்லாம் ஒரு விஷயமாக என மேற்கத்திய நாட்டினர் பார்த்து நம்மை ஏளனமாக சிரிப்பார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில், நாம் இருபது 30 வருடங்கள் கலாச்சாரத்தில் பின்தங்கி இருந்தாலும், ஏதாவது ஒரு வகையில் அவர்கள் கலாச்சாரம் நம்மை ஆட்டி படைத்து விடுகிறது.அவ்வாறு, மேற்கத்திய நாடுகளில் 1980 மற்றும் 90களில் ‘லிவிங் டு கெதர்’ என்ற கலாச்சாரம் அடி எடுத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அந்த கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில், அவர்கள் வாழத் தொடங்கினர். ஒரு ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வார்கள். அவர்களுக்கு தாங்கள் வாழ்கின்ற வாழ்க்கையில் திருப்தி ஏற்பட்டால் திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்வார்கள். இல்லை என்றால் சிறிது காலம் வாழ்ந்து விட்டு பிரிந்து சென்று விடுவார்கள். இதனால், யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை என நினைத்து இவ்வாறு வாழ ஆரம்பித்தனர்.தற்போது, இந்தியாவையும் ‘லிவிங் டு கெதர்’ என்ற வாழ்க்கை முறை ஆட்டிப்படைத்து வருகிறது. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் சர்வ சாதாரணமாக இளைஞர்கள் மத்தியில் இந்த கலாச்சாரம் பின்பற்றப்பட்டு வருகிறது. கல்லூரி படிப்பு படிக்கும்போது அல்லது படிப்பை முடித்து வேலைக்கு செல்லும் ஒரு ஆணும், பெண்ணும் ஒரே அறையில் சேர்ந்து வாழ்கின்றனர். இதனை, இளைஞர்கள் தங்களது பெற்றோரிடம் சொல்லிவிட்டு வாழ்கின்றனர். இன்னும் சிலர் அவர்களுக்கு தெரியாமல் வாழ்ந்து, அது பிடித்திருந்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கின்றனர். இல்லையென்றால் பிரேக் அப் என கூறிவிட்டு பிரிந்து சென்று தங்கள் பெற்றோர் கூறும் நபர்களை திருமணம் செய்து வாழ்கின்றனர். அவ்வாறு, பிரிந்து செல்லும் நபர்கள் மற்றவர்களை தொந்தரவு செய்யக்கூடாது என்பதை முன்கூட்டியே தெளிவாக எடுத்து கூறி, இந்த வாழ்க்கை முறையை பின்பற்றத் தொடங்கி வாழ்ந்து வருகின்றனர். தற்போது இந்த கலாச்சாரம் மெல்ல மெல்ல பரவி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ‘லிவிங் டு கெதர்’ முறை வளர தொடங்கியுள்ளது. இந்த விஷயம் தற்போது பரபரப்பாக பேசப்படுவதற்கு ஒரு கொலையும் காரணம். மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷர்த்தா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு, பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மும்பையை விட்டு வெளியேறி புதுடெல்லியில்  வீடு எடுத்து ‘லிவிங் டு கெதர்’ என்ற முறையில் வாழ்ந்து வந்தனர். சில நாட்களிலேயே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 18ம் தேதி ஷர்த்தாவை அவரது காதலர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்தார். அடுத்த 18 நாட்களில் தினமும் அதிகாலை 2 மணிக்கு எழுந்து ஷர்த்தாவின் ஒவ்வொரு உடல் பாகங்களையும் புதுடெல்லியின் பல்வேறு இடங்களில் வீசி எரித்தார். ஷரித்தாவின் பெற்றோர்கள் கொடுத்த புகாரில் இந்த விஷயம் வெளியே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது ‘லிவிங் டு கெதர்’ என்ற முறையில் வாழ்ந்த இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இந்த கொடூரமான கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.இதனையடுத்து, ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறையில் வாழ்ந்து வரும் அனைவருக்கும் இது ஒரு பீதியை கிளப்பி உள்ளது. பெற்றோர்கள் சம்மதத்துடன் நடைபெறும் திருமணங்களில்  பிரச்னை ஏற்பட்டால் பெரியவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன் நின்று அதனை தீர்த்து  வைக்க முயற்சி செய்வார்கள். ஆனால் ‘லிவிங் டு கெதர்’ முறையில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும், பிரச்னையை தீர்க்க யாரும் முன்வர மாட்டார்கள். நாமே அனைத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், இது போன்ற ஒரு வாழ்க்கை முறை தேவைதானா என்பதை இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் எனவும் ஒருவரை பிடித்திருந்தால் அதனை பெற்றோர்களிடம் கூறி முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்வதே சிறந்த தாம்பத்தியம் ஆகும் என பல்வேறு சமூக ஆர்வலர்களும் கருத்து கூறினாலும், நீ என்ன சொல்வது, நான் என்ன கேட்பது என தற்போது உள்ள இளைஞர்கள் ஏட்டிக்கு போட்டியாக நிற்கின்றனர். இதனால் காலத்தின் கட்டாயத்தை யாரும் மாற்ற முடியாது என்றும் மாற்றத்திற்கான நேரம் இது அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் எனவும் சிலர் கருத்து கூறுகின்றனர்.இதுகுறித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநல துறையின் தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் அலெக்சாண்டர் ஞானதுரை கூறியதாவது:‘திருமணம் செய்து கொள்ள கூடிய இரண்டு பேரிடமும் புரிதல் வேண்டும் என்பதற்காக மேற்கத்திய நாடுகளில் முதல் முதலில் டேட்டிங் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, அது வளர்ச்சியடைந்து அடுத்த இலக்கான ‘லிவிங் டு கெதர்’ என்ற முறையில் நிற்கிறது. நமது நாட்டிலும் திருமணம் பேசி முடித்த ஆணும் பெண்ணும் பேசி புரிந்து கொள்வதற்க்காக பெற்றோர்களே வெளியிடத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். வெளியே சென்று வரட்டும் பேசி பழகிக் கொள்ளட்டும் என்று நாம் அதனை நாகரீகமாக கூறுவோம். அதனை மேற்கத்திய நாடுகளில் டேட்டிங் என கூறுகிறார்கள். எங்களது மருத்துவமனைக்கு தற்போது வரும் சிலர் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறை வாழ்ந்தோம். அந்த பெண் பிடிக்கவில்லை என்று கூறி சென்று விட்டால் என ஆண்களும் ஆண் என்னை பிடிக்கவில்லை எனக் கூறி வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்டார். இதனால், மன அழுத்தத்தில் உள்ளேன் என பெண்களும் வருகின்றனர். புரிதல் இல்லாத ஒரு வாழ்க்கை தேர்ந்தெடுத்து இவர்கள் அதில் பயணிப்பதால் இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுகின்றன. பெண்களைப் பொருத்தவரை தற்போது பொருளாதார ரீதியில் நன்றாக சம்பாதிக்கின்றனர் ஆண்களை நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை இல்லை என கருதுகின்றனர். இதனால், திருமண பந்தத்தில் சென்று மாட்டிக்கொள்ள விரும்பவில்லை என மிகவும் வெளிப்படையாகவே கூறுகின்றனர். ஆண்களை பொறுத்தவரை திருமணத்திற்கு முந்தைய உறவை விரும்புகின்றனர். ஒரு பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என கற்பனை செய்து கொண்டு வாழ தொடங்குகின்றனர். அந்த பெண் பிடிக்கவில்லை என்றால் அடுத்தது அதற்கு அடுத்தது மாற்றிக் கொண்டே செல்கின்றனர். இதற்கு, லிவிங் டுகெதர் வாழ்க்கை முறை அவர்களுக்கு உதவுகிறது. பொருளாதார ரீதியில் ஆண்களும் பெண்களும் தற்போது ஒரு நல்ல நிலைக்கு வந்து விட்டதால் சமமான நிலைக்கு வந்து விட்டதால் லிவிங் டுகெதர் என்ற வாழ்க்கை முறை  தற்போது வேண்டுமானால் தவறாக தோன்றலாம் ஆனால் வருங்காலத்தில் இதை கண்டிப்பாக சமூகம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் இன்னும் 10 ஆண்டுகளில் இது வளர்ச்சி அடைந்து அனைவரும் இந்த நாகரிகத்தில் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அடுத்த கட்ட நகர்வுடேட்டிங் எனப்படும் கலாச்சாரத்தின்  அடுத்த கட்ட நகர்வுதான் ‘லிவிங் டு கெதர்’ என்ற வாழ்க்கை முறை. தற்போது  பெண்கள்  திருமணம் என்பதே தேவையில்லாத ஒரு விஷயமாக பார்க்கின்றனர். காரணம்  அவர்களது குடும்பத்தில் யாராவது திருமணம் செய்து கொண்டு  பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு கருதுகின்றனர். இதனால் திருமணம் செய்து  கொள்ளாமல் வாழும்  வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்கின்றனர். பிடிக்கவில்லை  என்றால் உடனடியாக வெளியே வந்துவிடலாம் என அவர்கள் நினைக்கின்றனர்.1970ல் தொடங்கியது‘லிவிங் டு கெதர்’ என்ற முறை மேற்கத்திய  நாடுகளில் பரவலாக இருக்கும் முறை 1970ம் ஆண்டுகளில் அந்த நாடுகளில் இந்த  முறை மிகவும் குறைவாக இருந்தது. ஆனால், தற்போது மிகவும் அதிகரித்து  காணப்படுகிறது. யாருடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும், யாருடன் செக்ஸ்  வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து சட்டங்கள் முடிவு செய்த காலம்  மாறி, தற்போது ஒரு பெண் அதை முடிவு செய்ய வேண்டிய காலத்தில் நாம் இருந்து  வருகிறோம்.ஆணுக்கு பெண் சமம்ஆண், பெண் இருவரும் தற்போது சமமாக  சம்பாதிப்பது இவர்களுக்குள் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை  குறைந்துவிட்டது. மேலும், பெண்கள் தற்போது எந்த விதத்திலும் முன்பு மாதிரி  இறங்கி போவதற்கு தயாராக இல்லை. எனவே, ஆணுக்கு பெண் சமம் என்று  கூறும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால், அனைத்தையும் சமமாக  பார்க்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.சட்ட அனுமதிதிருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா அல்லது  திருமணத்திற்கு பிறகு வைத்துக்கொள்ள வேண்டுமா என்பதை நாங்கள் தான் முடிவு  செய்வோம் என மேற்கத்திய நாடுகளில் இளைஞர்கள் முடிவெடுக்கின்றனர். அதற்கு அந்த நாட்டு சட்டமும் துணை நிற்கிறது….

The post ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கை முறையில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதால் கவனம் தேவை: மருத்துவர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Perambur ,
× RELATED நிறைய பெண்களுடன் சாட்டிங் செய்ததால்...