சேத்தியாத்தோப்பு: சாலை விரிவாக்க பணியில், மேம்பாலத்தை இணைக்கும் விதமாக போடபட்ட சாலையில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூர் சாலை விரிவாக்க பணிக்காக நிலங்கள் கையகப்படுத்தபட்டு அளவீடு செய்யும் பணிகள் முடிந்து சாலை அமைக்க இடையூறாக இருந்த குடியிருப்பு கட்டிடம், கடைகள், மரங்கள் உள்ளிட்டவைகள் இடித்து அகற்றப்பட்டன. சாலை அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், பின்னலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை இணைக்கும் விதமாக பாலத்தின் இருமுனைகளிலும் மண்ணை கொட்டி மேடாக்கி சமன்படுத்தி தார்சாலை அமைக்கப்பட்டிருந்தது. சாலை தரமின்றி அமைத்ததால் சில தினங்ககளாக பெய்துவரும் கனமழையில் பல இடங்களில் சாலை சரிவு ஏற்பட்டு உள்வாங்கி வருகிறது. இச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது, கனரக வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறுகின்றனர். பல மாவட்டங்களை இணைக்கும் இச்சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்….
The post பின்னலூர் பகுதியில் மேம்பாலத்தை இணைக்கும் சாலையில் விரிசல்: விபத்து ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.
