×

கர்ப்பமா?..சமந்தா மவுனம்

நடிகை சமந்தா, நாக சைதன்யா திருமணம் ஆகி 2 வருடம் தாண்டிவிட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். ஆனால் தான் ஓய்வு எடுக்க உள்ளதாக சில சமயம் பேட்டி அளிக்கும்போதெல்லாம் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவுகிறது. சில மாதங்களுக்கு முன் இதுபோல் பேச்சு வந்தபோது கோபம் அடைந்த சமந்தா,’அப்படியா? நான் கர்ப்பமாக இருப்பதை எப்போது கண்டுபிடித்தீர்கள். சொல்லுங்கள் நானும் தெரிந்துகொள்கிறேன்’ என்று நக்கலாகவும், கோபமாகவும் பதில் அளித்தார்.

இதையடுத்து அந்த பரபரப்பு அடங்கியது. இந்நிலையில் தமிழில் வெளியான 96 படத்தின் தெலுங்கு ரீமேக் ஆன ஜானு படத்தில் நடித்தார். இப்படத்தின புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இன்னும் ஒன்றிரண்டு வருடங்களில் நடிப்பிலிருந்து விலகி விடுவேன். ஜானு கதாபாத்திரம் அந்தளவுக்கு திருப்தி தந்திருக்கிறது என்றார் சமந்தா.

இதையடுத்து அவர் நடிப்பிலிருந்து விலகவிருப் பதாகவும், கர்ப்பம் அடைந்திருக்கிறார் என்றும் மீண்டும் தகவல் பரவியது. தற்போது தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு பிறகு சமந்தா சில காலம் ஓய்வு எடுக்கவிருக்கிறார். அதற்கு கர்ப்பமாகியிருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. ஆனால் இம்முறை சமந்தா பதில் அளிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

Tags : Samantha ,
× RELATED ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்