×

மாநாட்டில் தந்தை, மகன்

வெங்கட் பிரபு இயக்கும் படம், மாநாடு. இதில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய இளைஞனாக சிம்பு நடிக்கிறார். அவரது ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்ய, யுவன்சங்கர்ராஜா இசை அமைக்கிறார். வரும் 12ம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது.

ஏற்கனவே இப்படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகரன், கருணாகரன், பிரேம்ஜி நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன், மனோஜ் கே.பாரதி ஆகியோர் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரே படத்தில் பாரதிராஜா, அவரது மகன் மனோஜ் கே.பாரதி இணைந்து நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Tags : convention ,
× RELATED எச்எம்எஸ் பஞ்சாலை தொழிலாளர் சங்க 87வது மாநாடு