×

கர்ப்பிணியாக இருந்தபோது நடித்த சினேகா

நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார் நடிகை சினேகா. இவர்களுக்கு விஹான் என்ற மகன் இருக்கிறார். சமீபத்தில் 2வதாக பெண் குழந்தை பெற்றெடுத்தார் சினேகா. இவர் கர்ப்பமாக இருந்தபோதுதான் பட்டாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அடிமுறை கலை எனப்படும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்தது. கதை பிடித்திருந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டார்.

சண்டை காட்சிகளில் கர்ப்பிணியாக இருந்தபடியே நடித்தார். காட்சிப்படி படத்தில் இக்காட்சியில் சினேகா கர்ப்பமாக இருப்பதுபோன்று காட்சி அமைந்திருந்ததால் நிஜகர்ப்பத்தோடு நடித்தார். சில தினங்களுக்கு முன் அழகான பெண் குழந்தை பெற்றெடுத்தார் சினேகா.  இதுபற்றி இன்ஸ்டாகிராமில் கூறியிருக்கும் சினேகா,’கடந்த வாரம் என் வாழ்க்கையில் ஒரு ஏஞ்சல் (தேவதை) வந்து வாழ்வை இன்னும் அழகாக்கி யிருக்கிறாள்’ என குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் தான் கர்ப்பிணியாக இருந்த புகைப்படத்தையும் வெளியிடடுள்ளார்.

Tags : Sneha ,
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது