×

நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை தொடங்கியது

புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் வரும் டிசம்பர் 7ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை கூட்டங்களை ஒன்றிய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஒன்றிய நிதியமைச்சகத்துக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. குறிப்பாக தனிநபர் வருமான வரி விகிதங்களைக் குறைக்கும் பரிந்துரையின் மூலம் சுமார் 5.83 கோடி பேர் பயனடையலாம் என்று சிஐஐ தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஒன்றிய பட்ஜெட் – 2023க்கான முந்தைய ஆலோசனை கூட்டத்தை இன்று கூட்டியுள்ளார். பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும் முன்பே, வருமான வரி விகிதங்களை குறைக்க நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ‘ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தொழில்துறையினருடன் இன்று கலந்துரையாடுகிறார். இரண்டாம் கட்டமாக உள்கட்டமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான பங்குதாரர்களை சந்திக்கிறார்’ என்று தெரிவித்தன. …

The post நிர்மலா சீதாராமன் தலைமையில் ஒன்றிய பட்ஜெட் ஆலோசனை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Union Budget Consulting ,Nirmala Sitharaman ,New Delhi ,Winter Meeting of Parliament ,Union ,Elise Sitharaman ,Dinakaran ,
× RELATED மும்பை ரயிலில் பயணிகளுடன் செல்பி எடுத்த நிர்மலா சீதாராமன்..!!