×

டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு

செம்பனார்கோயில்: டிடிவி.தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண பொருட்களை தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மாமாகுடி ஊராட்சி  அப்பராஜபுரம்புத்தூர் கிராமத்தில் மழைநீரில் மூழ்கி நெற்பயிர்கள் சேதமடைந்த வயல்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று பார்வையிட்டார். அப்போது  அவரிடம் நீரில் மூழ்கி சேதம் அடைந்த பயிர்களை விவசாயிகள் காண்பித்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் 200 பேருக்கு 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி மற்றும் போர்வை ஆகியவற்றை நிவாரண உதவியாக டிடிவி தினகரன் வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் சீர்காழி பகுதிக்கு சென்ற பின்னர், நிவாரண பொருட்களை பெற அப்பகுதியினர் முண்டியடிதபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கட்சி நிர்வாகிகள் நிவாரண பொருட்களை பொதுமக்கள் மத்தியில் தூக்கி வீசினர். இதனால் அங்கு  பரபரப்பு ஏற்பட்டது….

The post டிடிவி தினகரன் பங்கேற்ற நிகழ்ச்சியில் நிவாரண உதவிகளை தூக்கி வீசியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : DTV ,Dhinakaran ,Sembanarcoil ,TTV.Thinakaran. ,Mayiladuthurai district ,Sembanarkoil ,Dinakaran ,
× RELATED இனியும் காலம் தாழ்த்தாமல் சாதிவாரி...