×

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு; டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பார்வை

ஊட்டி: ஊட்டியில் நடந்த டிஎன்பிஎஸ்சி தேர்வினை அரசு பணியாளர்கள் தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார் பார்வையிட்டார். நீலகிரி  மாவட்டத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, ஊட்டி அரசுக் கலைக்கல்லூரி,  சிஎஸ்ஐ., சிஎம்எம்., மேல்நிலைப் பள்ளி, பெத்லேகேம் பெண்கள் மேல்நிலைப்  பள்ளிகளில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த  குடிமைப்பணிகள் (தொகுதி ஐ ) பதவிக்கான நேரடி நியமன எழுத்து தேர்வு நேற்று  நடந்தது. இதில், ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டு தேர்வு எழுதினர்.ஊட்டி  ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வினை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் கிருஷ்ணகுமார்,  கலெக்டர் அம்ரித் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். காலை 9.30 மணி முதல்  பிற்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வினை எழுத  நீலகிரி மாவட்டத்தில் 1472 தேர்வாளர்கள் விண்ணப்பித்து இருந்தனர். நேற்று  நடை பெற்ற இத்தேர்வில் 672 நபர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினார்கள்.  இந்நிகழ்வின் போது ஊட்டி  வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி உட்பட அரசு  அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்….

The post ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு; டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் பார்வை appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Ooty ,Krishnakumar ,Government Staff Selection Commission ,Ooty. St. Joseph ,Nilgiri ,Dinakaran ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு