மலையாளத்தில் திரிஷா நடிக்கும் படத்துக்கு ராம் என தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. மோகன்லால் ஜோடியாக நடிக்கும் திரிஷா, டாக்டர் வேடம் ஏற்றுள்ளார். ஏற்கனவே தமிழில் பாபநாசம், தம்பி ஆகிய படங்களை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். கேரளாவில் படப்பிடிப்பு தொடங்கியது. தொடர்ந்து பிரிட்டன் மற்றும் கெய்ரோவில் நடக்கிறது.