×

ராதிகா ஆப்தேவுக்கு பதிலாக சினேகா

தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சோடா நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தை துரை செந்தில்குமார் இயக்கி இருந்தார். அவர் கூறுகையில், ‘அடிமுறை என்ற தற்காப்புக்கலையை மையமாக வைத்து படத்தை உருவாக்கினேன். சினேகாவுக்கு முன் ராதிகா ஆப்தேவிடம் கால்ஷீட் கேட்டோம். அவருக்கு தமிழ் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று தெரிந்ததும், தனுஷிடம் கேட்டு சினேகாவிடம் பேசினோம். முதலில், தனுசுக்கு அம்மா கேரக்டரில் நடிப்பதா என்று தயங்கினார்.

பிறகு பிரசன்னாவின் அனுமதியுடன் பட்டாஸ் படத்தில் நடித்தார். புதுப்பேட்டை படத்துக்கு பிறகு தனுஷ், சினேகா காம்பினேஷனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கத்திப்பாரா பாலத்துக்கு கீழே போலீசாருடன் அவர் சண்டை போடும் காட்சியை அதிக கவனத்துடன் படமாக்கினோம். காரணம், அப்போது சினேகா கர்ப்பமாக இருந்தார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் சண்டைக் காட்சியில் நடித்தார்’ என்றார்.

Tags : Sneha ,Radhika Apte ,
× RELATED இடப்பிரச்னையில் பெண்ணை தாக்கியவர் கைது