×

அடிமுறை கலைக்கு அங்கீகாரம் கேட்கும் பட்டாஸ்

கொடி படத்தை தொடர்ந்து ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் தந்தை, மகன் வேடங்களில் நடித்துள்ள படம், பட்டாஸ். வரும் 15ம் தேதி ரிலீசாகிறது. படம் குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது: தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்று, அடிமுறை. இது வர்மக்கலையின் இன்னொரு வடிவம்.  நாளடைவில் மறக்கப்பட்டு அல்லது மறைக்கப்பட்ட இந்தக் கலையை தந்தை  வேடமேற்றுள்ள தனுஷ், அவரது மனைவியாக வரும் சினேகா பயன்படுத்துகின்றனர்.

அடிமுறை கலைக்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது கிளைமாக்ஸ். கன்னியாகுமரி செல்வராஜ் என்பவர் தனுஷ், சினேகா இருவருக்கும் அடிமுறை கலை குறித்து பயிற்சி அளித்தார். மகனாக வரும் தனுஷுக்கு மெஹ்ரின் பிர்சோடா ஜோடி. தவிர நவீன் சந்திரா, நாசர், முனீஸ்காந்த், சதீஷ் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக், மெர்வின் இசை அமைத்துள்ளனர். யு சான்றிதழ் கிடைத்துள்ளது.

Tags :
× RELATED இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!