×

கோவாக்சினை விரைவாக வெளியிட அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?.. பாரத் பயோடெக் மறுப்பு

புதுடெல்லி:  கோவாக்சின் தடுப்பு மருந்தை அரசியல் அழுத்தம் காரணமாக அவசரகதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்ததாக வெளியாகி உள்ள தகவலை, பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்குதல் உச்சத்தில் இருந்தபோது, அதற்கான தடுப்பூசியை தயாரிப்பதில் ஒன்றிய அரசு தீவிர முனைப்பு காட்டியது. அதன் காரணமாக, சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டும், ஐதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனத்தின் கண்டுபிடிப்பான கோவாக்சின் தடுப்பூசியும் வேகமாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டது. இருப்பினும், கொரோனா தாக்குதலை தடுப்பதற்கான செயல்திறன், கோவாக்சினில் குறைவாக இருப்பதாக உலகளவில் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், அரசியல் ரீதியாக கொடுக்கப்பட்ட  அழுத்தங்கள் காரணமாகவே, பல்வேறு முக்கிய பரிசோதனைகளை செய்யாமல், கோவாக்சின் தடுப்பூசி அவசரகதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இதை பாரத் பயோடெக் நிறுவனம் மறுத்துள்ளது.இது தொடர்பாக நேற்று அது வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவாக்சின் தடுப்பூசி பற்றி வெளியாகி உள்ள  தகவல்கள் அனைத்தும் தவறானது. கோவாக்சின் பரிசோதனையை விரைவுப்படுத்த, வெளிபுறத்தில் இருந்து எந்த அழுத்தமும் கொடுக்கப்படவில்லை. இந்தியாவிலும், உலகளவிலும் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற திறன்மிக்க தடுப்பூசியை விரைவாக கொடுக்க வேண்டும் என்று, எங்கள் நிறுவனத்துக்குள் உள் அழுத்தம்தான்  அதிகமாக இருந்தது,’ என கூறப்பட்டுள்ளது….

The post கோவாக்சினை விரைவாக வெளியிட அரசியல் அழுத்தம் கொடுக்கப்பட்டதா?.. பாரத் பயோடெக் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Bharat Biotech ,New Delhi ,
× RELATED கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது: பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்