×

ஆர்ச்சர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஏர் டேக்சி அறிமுகம்: பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் வடிவமைப்பு..!!

வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த ஆர்ச்சர் நிறுவனம் எலக்ட்ரிக் ஏர் டேக்சியை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜோவி ஏவியேஷன்ஸ் ஆர்ச்சர் நிறுவனம், லண்டனை சேர்ந்த வெர்ட்டிக்கல் ஏரோஸ்பேஸ் நிறுவனங்கள் ஏர் டேக்சியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த ஆண்டு இறுதியில் ஆர்ச்சர் நிறுவனத்தின் மார்க்கர் என்ற ஏர் டேக்சி அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பெற்றது. தற்போது அந்த நிறுவனம் மிட்நைட் என்ற பெயரில் மற்றொரு டேக்சியை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏர் டேக்சி 2024ம் ஆண்டு இறுதிக்குள் சான்றிதழ் பெற்று 2025ம் ஆண்டு முதல் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏர் டேக்சியில் ஒரு விமானி மற்றும் 4 பயணிகள் அமர முடியும். இந்த வாகனத்திற்கு அமெரிக்க விமான கட்டுப்பாட்டு அமைப்பிடம் சான்றிதழ் பெரும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த நிறுவனத்தின் ஏர் டேக்சி சேவை நியூயார்க்கில் இருந்து நெவார்க் விமான நிலையத்திற்கு தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதில் பயணிக்க ஒரு மையிலுக்கு 500 ரூபாய் கட்டணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 60 நிமிட பயண நேரத்தை இந்த வாகனம் 10 நிமித்தமாக குறைக்கும் என்று ஆர்ச்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post ஆர்ச்சர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஏர் டேக்சி அறிமுகம்: பயண நேரத்தை குறைக்கும் நோக்கில் வடிவமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Archer ,Washington ,America ,Jovi Aviations ,
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...