மகேஷ் பாபுவுக்காக ஒரு பாடலுக்கு ஆடிய தமன்னா

மகேஷ்பாபு, ராஷ்மிகா நடிப்பில் வெளியாக இருக்கும் தெலுங்கு படம் சரிலேறு நீக்கெவரு. இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கியுள்ளார். இதில் ராணுவ அதிகாரி வேடத்தில் மகேஷ்பாபு நடிக்கிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு தமன்னா நடனமாடியுள்ளார். கடைசியாக கேஜிஎஃப் படத்திலும் இதுபோல் ஒரு பாட்டுக்கு தமன்னா ஆடியிருந்தார். ஹீரோயின் வாய்ப்புகள் அமையாததால் ஒரு பாடலுக்கு அவர் நடனமாடுவதாக பேசப்படுகிறது.

இது பற்றி தமன்னா கூறும்போது, ‘ஒரு பாடலுக்கு நடனம் ஆடினால் அதை சிலர் தவறாக பார்க்கிறார்கள். ஹீரோயின் வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு பாட்டுக்கு ஆடுவதாக விமர்சிக்கிறார்கள். ஆனால் பாலிவுட்டில் பெரிய ஹீரோயின்கள் பலரும் இதுபோல் ஒரு பாடலுக்கு நடனமாடுவது சகஜம். இது மகேஷ்பாபு படம். அதனால் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்தேன். இதில் தவறு ஏதும் இல்லை’ என்றார்.

Related Stories:

>