×

ஹீரோயின்களிடம் நெருக்கம் காட்டும் நடிகர்

ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தும் விஜய் ஆண்டனி காதல் காட்சிகளில் நடிகைகளை கட்டிப்பிடிக்க தயங்குகிறார் என்று கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த கூச்சத்தை ஒதுக்கிவிட்டு ரொமான்ஸ் காட்சியில் நெருக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார். அவர் நடித்து வரும் புதியபடம் தமிழரசன். இதில் ரம்யா நம்பீஸனுடன் நெருக்கமாக நடித்திருக்கிறார்.

நேர்மையான போலீஸ் அதிகாரியான விஜய் ஆண்டனி சூழ்நிலை காரணமாக எப்படி ஒரு போராளியாக மாறுகிறார் என்பதுதான் கதை. இதற்காக அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்த விஜய் ஆண்டனி ஹீரோயின் ரம்யா நம்பீஸனை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளிலும் நடித்திருக் கிறார். இப்படத்தை எழுதி இயக்குகிறார் பாபு யோகேஷ்வரன்.

இளையராஜா இசை அமைக்கிறார். அவரது இசையில் எஸ்பி.பாலசுப்ரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ் 12 வருடங்களுக்கு பிறகு இணைந்து ஒரு பாடல் பாடியிருக்கிறார்கள். கவுசல்யா ராணி தயாரிக்கிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் கோபி, ராதாரவி, யோகிபாபு, முனீஸ்காந்த், கவுதம், கும்கி அஸ்வின், கஸ்தூரி, சாயாசிங் நடித்திருக்கின்றனர். படம் ஜனவரியில் ரிலீஸ் ஆகிறது.

Tags : Actor ,heroines ,
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர் ஆர்.எம்...