×

ரஜினி படத்தை இயக்க மறுத்த நடிகர்

மொழி, நினைத்தாலே இனிக்கும், பாரிஜாதம், சத்தம் போடாதே, வெள்ளித்திரை உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்திருக்கும் இவர் சமீபத்தில் இயக்குனராகவும் மாறினார். மோகன்லால் நடித்த லுசிபெர் என்ற மலையாள படத்தை இயக்கினார். இப்படத்தை யடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதியபடத்தை இயக்க பிருத்விராஜுக்கு வாய்ப்பு வந்தது. அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

இதுகுறித்து பிருத்விராஜ் கூறியதாவது: எனது இயக்கத்தில் உருவான லுசிபெர் படம் வெளியான உடனேயே ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வந்தது. அதை என்னால் ஏற்க முடியவில்லை. காரணம் ஆடுஜீவிதம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தேன். அதற்காக 3 மாதம் நான் பயிற்சி மேற்கொள்கிறேன். ரஜினி நடிக்கவிருந்த படத்தை இயக்க முடியாமல் போனது எனக்கு வருத்தத்தை அளித்தது.

அதற்காக மன்னிப்பு கேட்டு ரஜினிக்கு நீண்ட கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினேன். அப்படியொரு நீண்ட கடிதத்தை என் வாழ்நாளில் இதுவரை நான் எழுதியதில்லை’ என்றார். பிருத்விராஜ், நடித்து முடித்த டிரைவிங் லைசென்ஸ் படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. அடுத்து, ஆடுஜீவிதம் படத்தில் நடிக்கிறார். பிறகு எம்புரான் என்ற புதிய படத்தை இயக்க உள்ளார்.

Tags : Actor ,Rajini ,
× RELATED இந்தியன் 2 இசை வெளியீடு: ஒரே மேடையில் ரஜினி, கமல்