×

ஐயப்ப பக்தர்களுக்கு உதவஅறநிலையத்துறை ஆபீசில் 24 மணிநேர தகவல் மையம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவ சென்னை அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சபரிமலை தர்மசாஸ்தா (ஐயப்பன்) கோயிலில் மண்டல பூஜை 16.11.2022 முதல் 27.12.2022 வரையும் மற்றும் மகர விளக்கு ஜோதி திருவிழா 27.12.2022 முதல் 14.01.2023 வரை நடைபெறுவதை முன்னிட்டு சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும் தமிழ்நாடு ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக தமிழக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை, ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தகவல் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மையம் 16.11.2022 முதல் 20.01.2023 வரை செயல்படும். தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இத்தகவல் மையச் சேவையினை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 044-28339999 ல் அழைத்து பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். …

The post ஐயப்ப பக்தர்களுக்கு உதவஅறநிலையத்துறை ஆபீசில் 24 மணிநேர தகவல் மையம்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,Segarbabu ,24 Hour Information Centre ,Office of the Department of Assistance to the Devotees ,Chennai ,Chennai Department ,Office ,Iyapa ,Sabarimala ,Tamil Nadu ,24 Hour Information Center ,Department of State ,Seagarbabu ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...