×

சிவகார்த்திகேயன் படம் டிராப் ஆகிறதா?

நடிகர் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படம் கடந்த சில வாரங்களுக்கு முன் பூஜையுடன் தொடங்கப்பட்டது. தற்போது அந்த படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக முடங்கியிருக்கிறதாம். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படமொன்றை பெரிய பட நிறுவனம் அதிக பொருட் செலவில் தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் படத்தின் பட்ஜெட் அதிகம் என்று சொல்லி அப்படத்தை தயாரிப்பதிலிருந்து பட நிறுவனம் ஒதுங்கிவிட்டதாம். இதையடுத்து விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டிராப் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் வேறு பட நிறுவனத்திடம் இப்படத்தை தயாரிப்பது பற்றி விக்னேஷ் தரப்பு பேசி வருகிறதாம்.

Tags : Sivakarthikeyan ,
× RELATED குரங்கு பெடல் வெளியிடும் சிவகார்த்திகேயன்