×

இடுப்பு நடனத்தில் மீண்டும் கவர்வாரா ஸ்ரேயா? மறுபடியும் ஒரு கிளாமர் ட்ரீட்

மழை படத்தில் தாவணி அணிந்த இளம்சிட்டாக ரசிகர்களை கவர்ந்த ஸ்ரேயா பின்னர் தனது தோற்றத்தை அல்ட்ரா மாடர்னாக மாற்றிக்கொண்டார். ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம் உள்பட பல படங்களில் நடித்தார். திடீரென்று அவரது மார்க்கெட் சரிந்து கோலிவுட் பக்கமே தலைகாட்டாமலிருந்தார். தெலுங்கு படங்களிலும் அவருக்கான மவுசு குறைந்ததால் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக முடிவு செய்தார். ரஷ்ய காதலர் ஆன்ட்ரி கொஸசீவை கடந்த ஆண்டு மணந்தார். கணவர் மிகவும் ஜோவியலானவர்.

ஸ்ரேயா தொடர்ந்து நடிக்க பச்சை கொடி காட்டினார். இரண்டாவது இன்னிங்ஸில் மீண்டும் ஒரு முன்னணி இடத்தை பிடிக்க குறி வைத்திருக்கிறார் ஸ்ரேயா. இடுப்பை சுழற்றி ஆடுவதுதான் அவரது ஸ்பெஷல் நடனம். சமீபமாக அவர் நடித்த படங்களில் வயதுக்கு ஏற்ற வேடம் என்பதுபோல் சேலைகட்டி அடக்க ஒடுக்கமாக நடித்துவந்தார்.

ஆனால் அவர் தனது தோற்றத்தை இன்னும் கட்டுக்குலையாமல் வைத்திருப்பதால் கவர்ச்சி குலுக்களுக்கு மீண்டும் தயாராகிவிட்டார். இந்தியில், சாப் கவுசல் மங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பாடல் காட்சி ஒன்றில் படு கிளாமராக ஆடியிருக்கிறார். தொப்புள் தெரிய ஸ்கர்ட், டாப்ஸ் மட்டும் அணிந்து அவர் ஆடியிருக்கும் பம்பர ஆட்டம் படப்பிடிப்பு அரங்கில் இருந்தவர்களை கிரங்கடித்துவிட்டதாம். சீக்கிரமே தமிழிலும் ஸ்ரேயாவின் இடுப்பசைவு ஆட்டங்களை பார்க்கலாம் என தெரிகிறது.

Tags : Shriya ,
× RELATED மம்தா மருமகனுக்கு எதிராக திரிபுராவில் பாஜ மறியல்