×

தாதா சாகேப் அமிதாப் பச்சன்

சமீபத்தில் புதுடெல்லியில் தேசிய திரைப்பட விருது விழா நடந்தது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ், மகாநடி என்ற சாவித்ரி வாழ்க்கை கதையில் நடித்ததற்காக தேசிய விருது பெற்றார். அதுபோல் சிறந்த நட்சத்திரங்கள், சிறந்த படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேசிய விருது பெற்றனர். அந்த விருதுகளை ஜனாதிபதிக்கு பதிலாக துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு வழங்கினார்.

இதேவிழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கும் தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. உடல்நிலை சரியில்லாததால் அவரால் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் விருது பெற்ற அனைவருக்கும் வருகிற 29ம் தேதி ஜனாதிபதி விருந்து அளிக்க உள்ளார். அன்றைய தினம் அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் விருதை ஜனாதிபதியே அவருக்கு வழங்கி கவுரவிக்க உள்ளார்.

Tags : Dada Saheb ,Amitabh Bachchan ,
× RELATED பின்னணி இசை இல்லாத டிராக்டர்