×

திருமயத்தில் கண்மாய் நிரம்பி பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது: தடுப்பு பணிகள் தீவிரம்

திருமயம்: திருமயத்தில் கண்மாய் நிரம்பி அரசுப் பள்ளி வழியே நீர் செல்வதால் மாணவிகள் நலன் கருதி ஊராட்சி சார்பில் தடுப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் பெய்து வரும் பருவ மழை காரணமாக திருமயம் பாப்பான் கண்மாய் நிரம்பியது. கண்மாய் நிரம்பியதும் உபரி நீர் திருமயம் வேங்கைக்கண்மாய்க்கு திறந்து விடப்படுகிறது. அவ்வாறு செல்லும் உபரி நீர் திருமயம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் வழியாக செல்வதால் பள்ளி மாணவிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை தடுக்க அப்பகுதியை சேர்ந்த மாணவிகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து திருமயம் ஊராட்சி சார்பில் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் 200க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கொண்டு பள்ளி வளாகத்திற்குள் கண்மாய் நீர் வருவதை தடுக்க மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பள்ளி வளாகத்தின் வழியே கால்வாய் செல்வதால் ஊராட்சி நிர்வாக ஊழியர்களால் ஓரளவு மட்டுமே கண்மாய் நீரை தடுத்து நிறுத்த முடிந்துள்ளதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இது ஆண்டுதோறும் நடக்கும் வழக்கமான நிகழ்வு என்பதால் பெற்றோர்கள் பாப்பான் கண்மாயிலிருந்து வெளியேறும் நீரை அப்புறப்படுத்த கால்வாய் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post திருமயத்தில் கண்மாய் நிரம்பி பள்ளி வளாகத்திற்குள் தண்ணீர் புகுந்தது: தடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tirumayat ,Tirumayam ,Thirumayat ,
× RELATED டோல்பூத் கட்டணத்தை தவிர்க்க...