×

புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அரசு வேலைவாய்ப்பில் எம்.பி.சி. பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பல்வேறு துறைகளில் இருக்கும் காலி பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து அறிவிப்பு வெளியிட்டு வருகிறது. இதில் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு எம்.பி.சி இடஒதுக்கீடு மறுக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் அண்ணாசாலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு சென்றனர். சட்டப்பேரவையை நோக்கி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயற்சித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுப்புகளை தூக்கி எறிந்து சட்டப்பேரவையை நோக்கி கும்பலாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து முன்னேறிய பாமகவினர் சட்டப்பேரவை வாயிலில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். …

The post புதுச்சேரி மாநிலத்தில் எம்.பி.சி.க்கு இடஒதுக்கீடு கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Bamkavin ,MPC ,Puducherry State Govt ,Bamakavins ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை