×

குடிப்பதை நிறுத்தி விட்டேன்; கவர்ச்சி நடிகை தடாலடி

கவர்ச்சி, காமெடி வேடங்களில் நடித்திருப்பவர் நடிகை சோனா. குசேலன், கோ, ஷாஜகான், பூவெல்லாம் உன் வாசம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். சிலர் அவரிடம் நீங்கள் ஏன் இப்போது நடிப்பதில்லை, பார்ட்டிக்கெல்லாம் போவதில்லையா  என்று கேட்டு வருகின்றனர். அதற்கு அவர் பதில் அளித்தார். இதுபற்றி சோனா கூறியதாவது:

அதிக படங்களில் நடிக்காதது ஏன், பார்ட்டிக்கு போகாதது ஏன் என்று சிலர் கேட்கின்றனர். இது அவர்களுக்கு சம்மந்தம் இல்லாதது. ஆனால் என் நலம் விரும்பிகளுக்காக இந்த விளக்கம் அளிக்கிறேன்.

இந்த ஆண்டு 4 படங்களில் நடித்துள்ளேன். பிடிக்காததால் 12 படங்களில் நடிக்க மறுத்துவிட்டேன். நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன். நான் பக்குவம் அடைந்திருக்கிறேன். தற்போது சேஸிங், பரமபத விளையாட்டு, அசால்டு, தேடுதல், பச்ச மாங்க ஆகிய படங்களில் நடிக்கிறேன். 2020ம் வருடம் சிறப்பாக அமையும் என எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

Tags : Sexy ,actress athlete ,
× RELATED கலைந்துபோகிறது கவர்ச்சி பிம்பம் ஊரடங்கில் ஆட்டம் கண்ட திரையுலகம்