×

மெட்டா நிறுவனத்தின் புதிய இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்!

வாஷிங்டன்: மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவர் பதவியிலிருந்து அஜித் மோகன் விலகிய நிலையில், சந்தியா தேவநாதன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். உலகளவில் இயங்கி வரும் சில நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் மெட்டா நிறுவனமும் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவின் வாட்ஸ்அப் தலைவர் அபிஜித் போஸ் மற்றும் ராஜிவ் அகர்வால் ஆகியோர் தங்களது பதவியிலிருந்து விலகினர். இந்நிலையில் சந்தியா தேவநாதன் மெட்டா நிறுவனத்தின் இந்தியத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் இந்த பொறுப்பை கவனிப்பார் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது….

The post மெட்டா நிறுவனத்தின் புதிய இந்திய தலைவராக சந்தியா தேவநாதன் நியமனம்! appeared first on Dinakaran.

Tags : Sandhya Devanathan ,India ,Meta ,Washington ,President ,Meta Company ,Ajith Mohan ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி தலைவர்கள் ஜூன் 1-ம் தேதி ஆலோசனை