×

சைக்கோ ரிலீஸ் மாற்றம்

விஷால் நடித்த துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி முடித்துள்ள மிஷ்கின், ஏற்கனவே இயக்கி முடித்த படம், சைக்கோ. உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ், நித்யா மேனன் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் முழுவதும் பார்வை இழந்தவர் வேடத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து இருக்கிறார்.

இந்த படம் வரும் 27ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், படத்தின் தலைப்பு சம்பந்தமாக சென்சார் போர்டில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி, வரும் ஜனவரி 24ம் தேதி படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

Tags : Psycho Release Change ,
× RELATED ஹாலிவுட் நடிகர் ஜானி வெக்டர் சுட்டுக் கொலை