- விஜய் ஹசாரே கோப்பை
- சத்தீஸ்வர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சுதர்ஷன்
- ஜெகதீசன்
- பேட்
- சதாம்
- எலைட் சி பிரிவு லீக்
- விஜய் ஹசாரே டிராபி ஒரு நாள் போட்டித் தொடர்
- தமிழ்
- தமிழ்நாடு
- சத்தியேஸ்கர்
- சுதர்சன்
- Jegadeesan
- தின மலர்
ஆலூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் எலைட் சி பிரிவு லீக் ஆட்டத்தில், தமிழக அணி 14 ரன் வித்தியாசத்தில் சட்டீஸ்கர் அணியை வீழ்த்தியது. ஆலூர், கர்நாடகா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சட்டீஸ்கர் முதலில் பந்துவீசியது. தமிழக தொடக்க வீரர்கள் சாய் சுதர்சன், நாராயண் ஜெகதீசன் இருவரும் முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்து அசத்தினர். சுதர்சன் 121 ரன் (109 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), ஜெகதீசன் 107 ரன் (113 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி மயாங்க் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். சஞ்ஜெய் யாதவ், சோனு யாதவ் தலா ஒரு ரன் எடுக்க, ஷாருக்கான் 28 ரன்னில் வெளியேறினார். தமிழ்நாடு 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 340 ரன் குவித்தது. அபராஜித் 36*, கேப்டன் இந்திரஜித் 14* ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். சட்டீஸ்கர் தரப்பில் ரவி கிரண் 3, மயாங்க் யாதவ் 2 விக்கெட் எடுத்தனர். தொடர்ந்து 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சட்டீஸ்கர் களம் கண்டது. தொடக்க வீரர்கள் அகில் ஹெர்வாத்கர் 5, அனுஜ் திவாரி 14 ரன்னில் வெளியேறிய நிலையில், கேப்டன் ஹர்பிரீத் சிங் – அமன்தீப் கரே ஜோடி 3வது விக்கெட்டுக்கு 214 ரன் சேர்த்து மிரட்டியது. ஹர்பிரீத் 121 ரன் (129 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்), அமன்தீப் 115 ரன் (99 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.அஜய் மண்டல் 27 ரன் எடுக்க, அடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். சட்டீஸ்கர் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்து 14 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. மனோஜ், சுமித் தலா 10 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தமிழகம் தரப்பில் சோனு யாதவ் 3, ஜெகதீசன் கவுசிக், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட் எடுத்தனர். தமிழ்நாடு தனது அடுத்த லீக் ஆட்டத்தில் நாளை கோவா அணியை எதிர்கொள்கிறது. புதுச்சேரி வெற்றி: இ பிரிவில் புதுச்சேரி – சர்வீசஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ராஞ்சியில் நடந்தது. சர்வீசஸ் 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 302 ரன் எடுக்க (ரவி சவுகான் 105, ராகுல் சிங் 81), புதுச்சேரி 48 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன் எடுத்து வென்றது. அருண் கார்த்திக் 78, அங்கித் ஷர்மா 54, பரஸ் டோக்ரா 129 ரன் (121 பந்து, 8 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர்….
The post விஜய் ஹசாரே கோப்பை சட்டீஸ்கரை வீழ்த்தியது தமிழகம்: சுதர்சன், ஜெகதீசன் அபார சதம் appeared first on Dinakaran.