×

பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்த ரியாஸ் கான்

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, கடந்த 10ம் தேதி பாங்காக்கில் தொடங்கியது. இங்கு ஒரு மாதம் வரை படமாக்கப்படும் காட்சிகளில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர். தவிர விக்ரம், ஐஸ்வர்யாராய் பச்சன், விக்ரம் பிரபு, ரகுமான், சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கக்குமனு, கிஷோர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தில் ரியாஸ்கான் இணைந்துள்ளார். 28 வருடங்களுக்கும் மேலாக சினிமா துறையில் நடித்து வரும் ரியாஸ்கான் மனிரத்னம் இயக்கத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. லைகா புரொடக்‌ஷன்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் சுபாஸ்கரன், மணிரத்னம் இணைந்து தயாரிக்கின்றனர். ஒளிப்பதிவு, ரவிவர்மன். இசை, ஏ.ஆர்.ரஹ்மான். வசனம், ஜெயமோகன். திரைக்கதை: மணிரத்னம், நடிகர் குமரவேல்.

Tags : Riyas Khan ,Ponni ,Selvan ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்