×

ஜெயலலிதாவின் ‘தலைவி’க்கு போட்டியாக ‘குயின்’

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி பெயரில் உருவாகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் கங்கனா ரனாவத் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் ஜெயலலிதா வேடத்தில் அவர் நடித்த டீஸர் வெளியானது. ஜெயலலிதா தோற்றத்தில் கங்கனா ரனாவத்தின் தோற்றத்துக்கு விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை இயக்குனர் கவுதம் மேனன் குயின் என்ற பெயரில் வெப் சீரிஸாக இயக்கி வருகிறார். ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். நேற்று இதன் டீஸர் வெளியானது. வரும் 5ம் தேதி குயின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக டீஸரில் அறிவிப்பு வெளிடப்பட்டிருக்கிறது.

Tags : Queen ,rival ,Jayalalithaa ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!