×

கங்கனாவை விட நானே பெஸ்ட் : நித்யா மேனன் தடாலடி

ஜெயலலிதா வாழ்க்கையை தழுவி தலைவி என்ற படமும் தி அயர்ன் லேடி என்ற படமும் உருவாகி வருகிறது. தலைவி படத்தில் கங்கனா ரனவத் நடித்து வருகிறார். தி அயர்ன் லேடி படத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். இது குறித்து நித்யா மேனன் கூறியது: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கும், எனக்கும் ஏகப்பட்ட ஒற்றுமைகள் இருக்கிறது. அவரும் பெங்களூரில் படித்திருக்கிறார். நானும், பெங்களூரில் படித்திருக்கிறேன். பேசும் ஸ்டைல், பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் ஒற்றுமைகள் இருக்கிறது.

இதனை இயக்குநர் பிரியதர்ஷினி கூட என்னிடம் கூறியிருக்கிறார். அவரிடம் இருக்கும் நல்ல குணங்கள் என்னிடமும் இருக்கிறது. அவரை  போன்று பிடிக்காதவற்றை சட்டென ஓபனாக கூறிவிடுவேன். அவரது வாழ்க்கை வரலாற்று படத்திற்கு இந்த பழக்க வழக்கங்கள், குணங்கள் எல்லாமே எனக்கு  உதவியாக இருக்கிறது. மேலும், அவரை பற்றிய மற்ற விஷயங்களை நான் தெரிந்து கொண்டு வருகிறேன். அவரை போன்று நடக்கவும், நடிக்கவும் தயார் செய்து கொள்கிறேன்.

மற்றவர்களை விட ஜெயலலிதா கதாபாத்திரத்திற்கு நான் சரியான பொருத்தமாக இருப்பேன். அந்த கதாபாத்திரத்திற்காக என்னால், எவ்வளவு கடின உழைப்பு கொடுக்க முடியுமோ அவ்வளவு கடின உழைப்பையும் நான் கொடுப்பேன் என்றார். தலைவி படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் தான் வெளியிடப்பட்டது. இதில் கங்கனாவின் லுக் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தான் மற்றவர்களை விட ஜெயலலிதா வேடத்துக்கு நானே பொருத்தமாக இருப்பேன் என தடாலடியாக கூறியுள்ளார் நித்யா மேனன்.

Tags : Nana Best Than Kangana ,Nithya Menon ,
× RELATED ரொமான்டிக் காமெடி கதையில் நித்யா மேனன்