×

கண்ணடித்து முத்தமிட்ட புதுதோழிகள்

அட்டகத்தி, எதிர்நீச்சல், கலகலப்பு 2, தேவி 2 போன்று பல படங்களில் நடித்திருக்கும் நந்திதா தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அவருக்கு புது தோழியாக கிடைத்திருக்கிறார் நடிகை அவிகா கோர். இவர் இந்தி படங்களில் நடித்திருப்பதுடன் சமீபத்தில் ராஜு காரி காடி 3ம் பாகம் என்ற தெலுங்கு படத்திலும் நடித்திருக்கிறார். நந்திதாவும், அவிகாவும் சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர். இருவரும் நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டனர்.

கவர்ச்சி உடையில் வந்த நந்திதா, அவிகா இருவரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவி விதவிதமாக போஸ் அளித்தனர். கன்னத்தில் அன்பு முத்தம் பரிமாறி கட்டிப்பிடித்தனர். பின்னர் இருவரும் கண்ணடித்து முத்தம் தருவதுபோல் செல்பி எடுத்துக்கொண்டனர்.  அதை இணைய தளத்தில் பகிர்ந்திருக்கிறார் நந்திதா. அதில்,’இன்று எனது தோழியுடன் ஒரு முத்த உரையாடல்’ என்று கேப்ஷன் தந்திருக்கிறார்.

Tags : newbies ,
× RELATED பாம்பாற்றில் செல்பி நீரில் மூழ்கி புதுப்பெண் உள்பட 4 பேர் பரிதாப சாவு