×

ரெய்டு போக யார் வரீங்க : டபுள் மீனிங்கில் அதா சர்மா லக லக

சிம்பு நடித்த, இது நம்ம ஆளு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த அதா சர்மா அடுத்து சார்ளி சாப்ளின் 2ம் பாகத்தில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்தி, தெலுங்கு படங்களிலும் அதா நடிக்கிறார். பல படங்களில் நடித்திருந்தாலும் இதுவரை திருப்புமுனையாக எந்த படமும் அமையாததால் இன்னும் தேடப்படும் ஹீரோயினாக மாறவில்லை. இதுவரை அதற்கான முயற்சியும் எடுக்காமலிருந்தார். திடீரென்று தடாலடியாக பல செயல்களை செய்துவருகிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியாக ஸ்டில் மட்டுமல்லாமல் வீடியோ வெளியிட்டுள்ளார். பேஷன் ஷோவில் அழகிகள் மேலாடை அணியாமல் வருவதுபோல் படுகவர்ச்சியாகவும், தொடை பளிச்சிடவும் நடந்து வரும் வீடியோ வெளியிட்டிருக்கும் அதா, தரையில் வில்லாக வளைந்தபடி போஸ் கொடுத்து வேறு யாருக்கு ஷாட் வேண்டும் என்று டபுள் மீனிங் வசனங்களை பதிவு செய்திருக்கிறார்.

அதேபோல் ரேஸ் பைக்கில் கவர்ச்சியான உடை அணிந்து யார் ரெய்டுக்கு வரப்போறீங்க என்று டபுள் மீனிங் டயலாக் வெளியிட்டு வருகிறார். அதா சர்மாவின் இந்த திடீர் பாய்ச்சலுக்கு காரணம் இம்மாதம் அவர் நடித்துள்ள கமாண்டோ 3 படம் திரைக்கு வரவுள்ளதுதானாம். ஆக்‌ஷன் ஹீரோக்களை ஓரம் கட்டும் அளவுக்கு அதிரடியாக சண்டை காட்சிகளில் அதா நடித்துள்ள இப்படம் தனக்கு பெரிய வாய்ப்பை திரையுலகில் ஏற்படுத்தி தரும் என்று நம்பிக்கையில் இருக்கிறார். தான் நடித்துள்ள அதிரடி ஆக்‌ஷன் காட்சி வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில்  பகிர்ந்திருக்கிறார்.

Tags : Waringa ,Raid: Ata Sharma ,world ,
× RELATED உலக கோப்பை பயிற்சி ஆட்டம் இந்தியா – வங்கதேசம் இன்று பலப்பரீட்சை