×

இங்கிலாந்து விமான நிலைய வளாகத்தில் 18 ஆண்டாக வாழ்ந்த ஈரானிய மனிதர் மரணம்: கடைசி வரை பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை

பாரிஸ்: ஈரான் நாட்டின் தந்தை மற்றும் இங்கிலாந்து தாய்க்கு பிறந்த மெஹ்ரான் கரிமி நாசேரி என்பவர், கடந்த 1974ம் ஆண்டு இங்கிலாந்தில் படிப்பதற்காக ஈரானை விட்டு வெளியேறினார். இங்கிலாந்து படிப்பை முடித்துவிட்டு ஈரான் திரும்பியதும், அவரை அந்நாடு ஏற்கவில்லை. அதனால் மீண்டும் இங்கிலாந்து சென்றார். பாரிஸின் சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் தங்கியிருந்த அவருக்கு, இங்கிலாந்து அரசும் குடியுரிமை தரவில்லை. அதனால் வேறுவழியின்றி அந்த விமான நிலைய வளாகத்திலேயே படுத்துக் கொண்டார். கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக விமான நிலைய பகுதியிலேயே வாழ்ந்து வந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். இவரது மறைவுக்கு விமான நிலைய ஊழியர்களும், காவல் துறையினரும் இரங்கல் தெரிவித்து, அவருக்கான இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘விமான நிலைய வளாகத்தின் குறிப்பிட்ட பகுதியில் தங்கியிருந்த மெஹ்ரான் கரிமி நாசேரி, விமான நிலைய ஊழியர்களுடன் நல்ல நட்பை பேணி வந்தார். விமான நிலையம் வரும் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிவந்தார். அவரை ‘லார்ட் ஆல்ஃபிரட்’ என்று செல்லமாக விமான நிலைய ஊழியர்கள் அழைப்பர். இதுநாள் வரை பாஸ்போர்ட், விசா வசதிகள் செய்து தரப்படவில்லை. கடைசிவரை ஏமாற்றத்துடனே மெஹ்ரான் கரிமி நாசேரி இறந்தார்’ என்று கூறினர்….

The post இங்கிலாந்து விமான நிலைய வளாகத்தில் 18 ஆண்டாக வாழ்ந்த ஈரானிய மனிதர் மரணம்: கடைசி வரை பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை appeared first on Dinakaran.

Tags : UK ,Paris ,Mehran Karimi Naseri ,
× RELATED ஜூலை 4ல் பிரிட்டன் பொதுத்தேர்தல்: பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு