×

தமிழ்மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்பு கற்க உரிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்

சென்னை: இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு பவள விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்தியா சிமென்ட்ஸ் நிறுவன தலைவர் சீனிவாசன், இயக்குனர் ரூபா குருநாத், ஆந்திர மாநில நிதியமைச்சர் புக்கனா ராஜேந்திர பிரசாத், ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பாதுகாப்பு துறையில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதற்கான வாய்ப்பினை பிரதமர் மோடி தமிழகத்துக்கு கொடுத்திருக்கிறார். பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் மீது தனி கவனம் செலுத்துகிறார். தமிழகத்தில் 64 சாலை திட்டங்கள் உருவாக்குவதற்காக ஒன்றிய அரசு ₹47 ஆயிரத்து 589 கோடி ஒதுக்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல் கட்ட விரிவாக்க பணிகளுக்காக ₹3,770 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ் மொழி உலகின் மூத்த, பழமையான மொழிகளில் ஒன்று. தமிழ் இலக்கியங்களும், உலக இலக்கியங்களில் மிகவும் தொன்மைவாய்ந்தது. தமிழ் மொழி தமிழர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கே பெருமை. எனவே தமிழ் மொழியை வளர்ப்பதும், பாதுகாப்பதும் தமிழகத்துக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்தின் பொறுப்பு. தேசத்தில் பல்வேறு மாநிலங்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளை தங்களது தாய்மொழியில் தொடங்கியிருக்கிறார்கள். தமிழக அரசும், தமிழ் மொழியில் மருத்துவ கல்வியை போதித்தால், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு பயன் உள்ளதாகவும், எளிதாகவும் இருக்கும். தங்களது தாய்மொழியில் மருத்துவ அறிவியல் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு மாநிலத்தையும், தேசத்தையும் வலுப்படுத்த முடியும். தமிழக அரசு, தமிழ் மொழியில் மருத்துவம் மற்றும் ெபாறியியல் கற்றுக் கொடுக்க கவனம் செலுத்த வேண்டும். அதற்கான பாடத் திட்டங்களை அமைத்து செயல்படுத்தினால், தமிழ் மொழிக்கு சேவை செய்வதற்கான பணிகளை நாங்கள் செய்வோம். இவ்வாறு அவர் பேசினார். …

The post தமிழ்மொழியில் மருத்துவம், பொறியியல் படிப்பு கற்க உரிய பாடத்திட்டங்களை வகுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Amit Shah ,Tamil Nadu government ,CHENNAI ,India Cements' 75th Annual Coral Festival ,Kalaivanar Arena, Chennai ,
× RELATED பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க...