×

ரயில் மோதி 3 பேர் பலி

தாம்பரம்: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகாவை சேர்ந்தவர் தன்ராஜ் (45). வழக்கறிஞரான இவர் தாம்பரம் பகுதியில் உள்ள அவரது நண்பரை சந்திப்பதற்காக வந்து, அங்கிருந்து நேற்று தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையம் அருகே ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.* குரோம்பேட்டை, புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் (42). இவர் குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, அவ்வழியாக வந்த மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.* ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது அவ்வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்த தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று, 3 உடல்களையும் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ரயில் மோதி 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Thanraj ,Madurai District, ,Malur Thaluka ,Ivar ,Thambaram ,Dinakaran ,
× RELATED நடமாடும் நகைக்கடையாக நீதிமன்றத்தில் ரவுடி ஆஜர்