×

திருமணம் மூலம் இணையும் விஜய் - அதர்வா குடும்பம்

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ். இவரது நிச்சயதார்த்தம் டிசம்பர் 6-ம் தேதி சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் எஸ்.ஏ.சந்திரசேகரின் பேத்தி சினேகா பிரிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. முரளியின் இளைய மகன் ஆகாஷ் சிங்கப்பூரில் எம்.பி.ஏ படித்தார். அங்கு அவரோட கூடப் படிச்சவங்கதான் சினேகா பிரிட்டோ.

படிக்கும்போது இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. எஸ்.ஏ.சந்திரசேகரோடு கூடப்பிறந்த தங்கை மகளான விமலாவின் மகள்தான் இந்த சினேகா. இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதல் கைகூட தாமதமாகியுள்ளது. மற்றொரு காரணம் அண்ணன் அதர்வாவுக்கு திருமணம் நடந்த பிறகு நான் திருமணம் செய்துகொள்கிறேன் என்று ஆகாஷ் சொன்னதாலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பிரச்னை எல்லாம் சரியாகி, இருவீட்டாரின் ஒப்புதலுடன் டிசம்பர் 6-ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சினேகா 2012-ம் ஆண்டு வெளியான சட்டம் ஒரு இருட்டறை 2 படத்தின் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Vijay - Atharva Family ,
× RELATED மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்