×

ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் சிக்கின தானேவில்: 2 பேர் கைது

தானே: ரூ.8 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட வந்த 2   ஆசாமிகளை தானே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கோடி  மதிப்பிலான ரூ.2 ஆயிரம் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மகாராஷ்டிரா மாநிலம் தானே  ஜிபி சாலை, காய்முக் சவுபாட்டி அருகே உள்ள சாலையில் நேற்று முன்தினம் 2   ஆசாமிகள் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடுவதற்காக காரில் சுற்றி திரிவதாக   தானே போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் சாதாரண உடையில்  விரைந்து சென்ற போலீசார் அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது  சந்தேகத்திற்கிடமாக  சுற்றி திரிந்து கொண்டிருந்த காரை மடக்கி அதில் இருந்த  2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இருவரின் பதில்களும் முன்னுக்கு  பின் முரணாக  இருந்ததால் சந்தேகத்தை உறுதி செய்த போலீசார் அவர்கள்  வைத்திருந்த கைப்பையை வாங்கி சோதனை நடத்தினர். அதில் ரூ.8 கோடி மதிப்பிலான 2  ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரியவந்தது.  அதனை பறிமுதல்  செய்த போலீசார் இரு ஆசாமிகளையும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு அழைத்து  சென்றனர். அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள்  ராம் ஹரி சர்மா(52) மற்றும்  ராஜேந்திர ரகுநாத் ராவுத்(58) என தெரியவந்தது.   கள்ள நோட்டை அச்சடித்தது எங்கு, இச்சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு  உள்ளது என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post ரூ.8 கோடி மதிப்புள்ள ரூ.2000 கள்ள நோட்டுகள் சிக்கின தானேவில்: 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Thane ,Dinakaran ,
× RELATED ரயிலில் பறித்த செல்போனை மீட்க முயன்ற...