×

கூட்டணியை மாற்றினாலும் பீகாரில் நிதிஷ் மீண்டும் முதல்வரானது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. பாஜ.வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி நிதிஷ் குமார் கூட்டணியில் இருந்து வெளியேறினார். பின்னர், காங்கிரஸ், ஆர்ஜேடி.யுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் முதல்வராக பதவியேற்றார். தற்போது, பீகாரில் மகாகத் பந்தன் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து முஜாபர்பூரை சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் எம்ஆர். ஷா, எம்எம். சுந்தரேஷ் அமர்வு, “கட்சி தாவல் தடை சட்டம் மற்றும் 10வது அட்டவணையின்படி, சில விதிகளின் கீழ் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி அமைக்கவும் அனுமதிக்கப்படுகிறது. அதன்படி, பீகாரில் நிதிஷ் முதல்வரானது செல்லும். எனவே, இந்த மனு முகாந்திரம் இல்லாததால் தள்ளுபடி செய்யப்படுகிறது,’ என்று உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்….

The post கூட்டணியை மாற்றினாலும் பீகாரில் நிதிஷ் மீண்டும் முதல்வரானது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nidish ,Bihar ,Supreme Court ,New Delhi ,Baja ,Chief Minister ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED இவிஎம் வழக்கில் உச்சநீதிமன்றம்...