×

தேனி, சேலம் குடுமிபிடி சண்டை வலுத்து வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘புதிய ரூட்டை பிடிச்சிருக்காராமே மாம்பழ கட்சி  சர்ச்சை எம்எல்ஏ..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.   ‘‘மாங்கனி   மாவட்டத்தில் சர்ச்சைகளின் மறு உருவமாகவே மாறிக்கிட்டு இருக்காராம்  மாம்பழ  கட்சி எம்எல்ஏ. அவரோட தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஒரு டாஸ்மாக்  கடை  இருக்கு. அந்த கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை   வச்சாராம். அதிகாரிகள் குறிப்பிட்ட நாள் கெடு குடுத்தாங்களாம். இதை   குறித்துக் கொண்ட எம்எல்ஏ, குறிப்பிட்ட நாளில் அந்த கடை முன்பு போனாராம்.   தன்னுடன் ரெடியாக வைத்திருந்த கேமராக்களை ஆன் செய்யச் சொல்லி விட்டு   கடையின் முன்பு விழுந்து சாஷ்டாங்கமாக கும்பிட்டாராம். இதை உடனடியாக அவரது   டீம் சமூக வலை தளங்களிலும் படுவேகமாக பரப்பி விட்டதாம். அதே நேரத்தில்   மீடியாக்களுக்கும் பிரஸ் ரிலீஸ் கொடுத்தாராம். நம்ம ஸ்டேட்டுலேயே டாஸ்மாக்   கடை முன்பு விழுந்தது குறித்து பெருமையாக குறிப்பிட்டு பிரஸ்‌ ரிலீஸ்   கொடுத்த ஒரே லீடரு, எங்க அண்ணன்தான் என்று அடிப்பொடிகள் சிலிர்த்துக்கிட்டு   இருக்காங்களாம். இதே பாணியில் மேலும் சில கடைகளை பட்டியல் எடுத்து   வச்சிருக்காராம். அங்கும் இதேபோல் விழுந்து எழுந்து நியூஸ் பரப்ப   ஆயத்தமாகிகிட்டு இருக்காராம்.  ‘இன்றைய பரபரப்பில் ஏதாவது வித்தியாசமா   செஞ்சாதான் நியூஸ் வரும் என்பது அண்ணனுக்கு தெரியும். அதனாலதான், இந்த   மாதிரி ரூட்டை பிடிச்சிருக்காரு,’ என்று போட்டு உடைக்கிறாங்களாம் உடன்   செல்லும் சகாக்கள்’’ என்றார் விக்கியானந்தா.   ‘‘யார் எந்த அணியில இருக்கிறார்கள் என்று தெரியாம இலை கட்சி தொண்டருங்க ஏக குழப்பத்துல இருக்காங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.   ‘‘தமிழகத்துல இலை கட்சி சேலத்துக்காரர்கிட்டயும், தேனிக்காரர் கிட்டயும் இரண்டு அணியாக பிரிஞ்சு இருக்குது. இதுல சேலத்துக்காரர் இடைக்கால ஜென்ரல் செக்ரட்ரியாக இருக்குறாரு. தேனிக்காரர் கட்சியோட ஒருங்கிணைப்பாளரு நான்னு கூறிவர்றாரு. இதுல, ஏற்கனவே தேனிக்காரரின் ஆதரவாளர்களை, சேலத்துக்காரர் நீக்கிட்டு புதிய நிர்வாகிகளை நியமிச்சாரு. தற்போது கடந்த வாரம் வெயிலூர் மாவட்டத்துல, தேனிக்காரர் தனது ஆதரவாளர்களுக்கு புதிய பதவி வழங்கி அறிவிப்பு வெளியிட்டாரு. அதுல மாவட்டம், மாநகரம், நகரம், ஒன்றியம்னு பல பதவிகளுக்கு பொறுப்புகளை வழங்கியிருந்தாரு. முதலில் சேலத்துக்காரர் பக்கம் இருந்தவங்க. இப்ப தேனிக்காரர் பக்கம் இருக்காங்களாம். தற்போது யார்? யார்? எந்த அணியில இருக்காங்கன்னு தெரியவில்லையாம். ஒவ்வொரு நாளும் ஒரு அணிக்கு செல்லும் நிலைக்கு இலைகட்சி நிர்வாகிங்க உள்ளதால, தொண்டருங்க யார் பின்னால் போறதுன்னு குழப்பத்துல இருக்காங்களாம். இப்படியே போச்சுன்னா எம்பி தேர்தல்ல இலை கட்சி கட்டாயம் மண்ணை கவ்வும்னு ரத்தத்தின் ரத்தங்களே பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘அதிமுக அணிகளின் மோதல் நாளுக்கு நாள் புதுத்திருப்பம் ஆகிட்டு வருது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.  ‘‘இலை கட்சியில் தேனிக்காரருக்கும், சேலம்காரருக்கும் குடுமிப்பிடி சண்டை  தான்.  முத்து மாவட்டத்தில் சேலம்காரர் அணியில் அதிருப்தியாக இருந்த மாஜி  அமைச்சர் செல்லமானவரை தேனிக்காரர் தரப்பு வளைத்துப் போட்டது. அவரை தனது  அணியின் மாவட்ட செயலாளராகவும் அறிவித்தார் தேனிக்காரர். இதற்காக  தேனிக்காரர் தன்னை செல்லமானவர் சந்திக்க வருவார் என தலைநகரில்  ஆதரவாளர்களுடன் காத்திருந்தாராம். இதற்காக செல்லமானவரும் தலைநகருக்கு  பயணித்துள்ளார். ஆனால்  தலைநகருக்கு சென்ற செல்லமானவரை சேலம் தரப்பு  இடைமறித்துப் பேசி சமாதானம் செய்ததாம். அப்போது அவருக்கு சில  உறுதிமொழிகளும் தரப்பட்டதாம்.  இதில் உச்சி குளிர்ந்து போன செல்லமானவர்  அந்தர்பல்டி அடித்து விட்டாராம். தேனிக்காரர் அணியில் மாவட்ட செயலாளராக  அறிவித்த நிலையில், செல்லமானவர் சேலம் காரரை சந்தித்து ஐக்கியமாகி  விட்டாராம். இதனால் தேனிக்காரர் தரப்பு அதிர்ச்சி அடைந்து போனதாம். ராணுவம்  போல இருந்த கட்சி, யார் கண்ணு பட்டுச்சோ….. எலியும், பூனையுமாக  இருக்கும் இருவர் கைகளில் அகப்பட்டு இப்படி ஆயிடுச்சு என கவலை  தெரிவிக்கின்றனர் முத்துநகரத்து இலை கட்சியினர்’’ என்றார் விக்கியானந்தா. மோடி தமிழகம் வருகையை ஒட்டி எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஏகப்பட்ட திட்டம் வச்சிருந்தாங்க… அது என்னாச்சு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.   ‘‘பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தனித்தனியாக சந்தித்து ஒருவர் மீது ஒருவர் புகார் செய்யனும்னு நினைச்சு கடிதமும் எழுதி தயாராக வச்சிருந்தாங்களாம். ஆனால் பிரதமர் தனியாக பார்க்க மறுத்திட்டாராம். அதோடு பொக்கே வாங்கும்போது இருவரையும் ஒரு சேர நிற்க வைச்சு வாங்கினாராம். திரும்பி செல்லும்போது இருவரையும் பார்க்காமல் கையை காட்டிவிட்டு சென்று விட்டாராம். இதனால் எடப்பாடி கடும் அப்செட்டாம்’’ என்றார் விக்கியானந்தா….

The post தேனி, சேலம் குடுமிபிடி சண்டை வலுத்து வருவதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Honey ,Salem ,wiki ,Mango Party ,MLA ,Peter ,Mangani ,Theni ,Yananda ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை