×

மம்மூட்டியை கண்டதும் கதறி அழுத ரசிகை

பிரபல ஹீரோக்களை ரசிகர்கள் சந்திக்கும்போது உற்சாகம் அடைவார்கள். அதற்கு நேர்மாறாக ஒரு ரசிகை தனக்கு பிடித்த நடிகரை கண்டதும் கதறி அழுத சம்பவம் நடந்துள்ளது. நடிகர்களில் வித்தியாசமானவர் மம்மூட்டி. நடிகருக்கான பந்தா எதையும் அவரிடம் காண முடியாது. பழகுவது, நடிப்பது எல்லாவற்றிலும் யதார்த்த மாக இருப்பார். கேரள மாநிலம் கொச்சியில் மம்மூட்டி வீடு உள்ளது. சென்ற ஞாயிறன்று கோழிக்கோட்டிலிருந்து நட்சத்திரா என்ற ரசிகை தனது தோழிகள் சிலரை அழைத்துக்கொண்டு மம்மூட்டியை காண வந்திருந்தார்.

மம்மூட்டி வீட்டு முன் அவர்கள் காத்திருந்தனர். மம்மூட்டி வெளியில் வந் தால் தூரமாக இருந்து பார்த்துவிட்டு புறப்பட எண்ணியிருந்தனர். ஒரு மணி நேரமாக அவர்கள் காத்திருந்தனர். ஞாயிற்றுக்கிழமையாக இருந்தபோதும் படப்பிடிப்புக்கு புறப்பட தயாரான மம்மூட்டி வீட்டிலிருந்து வெளியில் வந்தார். அவரிடம், சில ரசிகை உங்களை பார்க்க ஒரு மணி நேரமாக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

உடனே மம்மூட்டி அவர்களை அருகில் அழைத்து நலம் விசாரித்தார். தூரமாக இருந்து பார்த்துவிட்டுபோக வந்த ரசிகைக்கு மம்மூட்டியே அருகில் அழைத்து விசாரித்ததும் இன்ப அதிர்ச்சியில் கதறி அழத் தொடங்கினார். அவரை தோளில் சாய்த்து ஆறுதல் சொன்ன மம்மூட்டி எல்லோருக்கும் வாழ்த்து சொல்லிவிட்டு அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என அட்வைஸ் சொல்லிவிட்டு புறப்பட்டார்.

Tags : Mammootty ,
× RELATED கொரோனா ஊரடங்கில் போட்டோகிராபரான மம்மூட்டி