×

சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை தரமாக, விரைவாக கட்டி முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு

சென்னை: சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் கட்டப்பட்டு வரும் அரசு பணியாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பிறகு அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, தாடண்டர் நகர் சைதாப்பேட்டை தொகுதியின் ஒரு பகுதி. இதில்தான், தமிழக அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த துறை அலுவலர்கள், பணியாளர்களுக்கு அரசின் சார்பாக கட்டி கொடுக்கின்ற குடியிருப்புகள் உள்ளன. பல்வேறு துறையை சார்ந்த அலுவலர்கள், அரசு ஒதுக்கீட்டில் குடியிருக்கிறார்கள். ஏ-வகை குடியிருப்புகள் 100, பி-வகை குடியிருப்புகள் 136, சி-வகை குடியிருப்புகள் 812 உள்ளன. பொதுப்பணித்துறையை சார்ந்த பொறியாளர்களுக்கான 41 குடியிருப்புகள் உள்ளன. தாடண்டர் நகர் வளாகத்தில், 72 பழைய குடியிருப்புகள் இருக்கின்றன. அவற்றை இடித்துவிட்டு, புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கு அதிகாரிகளுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. புதிதாக, 190 பி-வகை குடியிருப்புகள் ரூ.88.49 கோடி மதிப்பீட்டில், கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு ஒப்பந்தம் வழங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்த குடியிருப்பு, 19 பல்லடுக்கு குடியிருப்பு கட்டிடம் ஆகும்.  இதில், 10 அடுக்கு குடியிருப்புகள் கட்டுமான பணி முடிவடைந்துள்ளது. இன்னும் 9 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட வேண்டியுள்ளதால், அவற்றை தரமாகவும், விரைவாகவும் கட்டி முடிக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும், புதிதாக 190 சி-வகை குடியிருப்புகள் கட்டுவதற்கு, கடந்த 1ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்றார்.இந்த ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்….

The post சென்னை, சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் அரசு பணியாளர் குடியிருப்பு கட்டிடத்தை தரமாக, விரைவாக கட்டி முடிக்க வேண்டும்: அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Building ,Thadender City, Chennai, Saithapet ,Minister ,Etb. Velu ,Chennai ,Saithapet Thadender Nagar ,Etb. ,Velu ,Chennai, Chennai, ,Saithapet Thatander Nagar ,
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...