×

கழுத்தை அறுத்து விடுவேன் ஜன்னல்ல குதிச்சு ஓடி விடு: அதிகாரிகளை மிரட்டிய இங்கி. அமைச்சர் ராஜினாமா

லண்டன்: ‘கழுத்தை அறுத்து விடுவேன். ஜன்னல் வழியாக குதித்து ஓடி விடு…’ என்றெல்லாம் அதிகாரிகளை மிரட்டிய இங்கிலாந்து அமைச்சர், பதவியை ராஜினாமா செய்துள்ளார். இங்கிலாந்தில் பிரதமர் லிஸ் டிரெஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமராகி உள்ளார். இவர் பதவியேற்று 2 வாரங்களே ஆன நிலையில், அமைச்சர்களின் செயல்பாடுகளால் இவருக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியை சேர்ந்த உள்துறை அமைச்சரான சுவெல்லா பிரேவர்மென், விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், அவரை பதவி விலகும்படி வலியுறுத்தி வருகின்றன.இந்நிலையில், கெவின் வில்லியம்சன் என்ற இணையமைச்சரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். துறை ஒதுக்கப்படாத அமைச்சராக இருந்த இவர், தனது துறையின் மூத்த அதிகாரிகளை தகாத வார்த்தைகளால் திட்டி அனுப்பிய தகவல்களை. பிரபல நாளிதழ் சமீபத்தில் செய்தி வெளியிட்டது. மேலும், `கழுத்தை அறுத்து விடுவேன்`, `ஜன்னல் வழியே குதித்து ஓடு’, என்றும் அதிகாரிகளை கெவின் மிரட்டுவதாகவும் அந்நாளிதழ் குறிப்பிட்டிருந்தது. இதையடுத்து, கெவின் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் சுனக்கிற்கு அவர் அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘என் மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன். இது தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க, பதவியை ராஜினாமா செய்கிறேன். இதில் எந்த தவறிலும் ஈடுபடவில்லை என்பதை நிரூப்பிப்பேன்,’ என்று கூறியுள்ளார். அவருடைய ராஜினாமாவை ஏற்பதாக சுனக் அறிவித்துள்ளார்….

The post கழுத்தை அறுத்து விடுவேன் ஜன்னல்ல குதிச்சு ஓடி விடு: அதிகாரிகளை மிரட்டிய இங்கி. அமைச்சர் ராஜினாமா appeared first on Dinakaran.

Tags : Ingi ,London ,minister ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை