×

கபடதாரி சிபிராஜ்

சமீபகாலமாக நடிகர் சிபிராஜ் தனது படங்களுக்கு, நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்ஸன் துரை, கட்டப்பாவ காணோம் என வித்தியாசமான டைட்டில்களை தேர்வு செய்கிறார். அடுத்து சிபி நடிக்கும் படத்துக்கு கபடதாரி என பெயரிடப்பட்டிருக்கிறது.  ‘கபடதாரி’ என்றால் பாசாங்குக்காரன் அல்லது வேஷக்காரன் என்று பொருள். சஸ்பென்ஸ், எமோஷனல், திரில்லர் படமாக உருவாகும் இதில் ஹீரோயினாக நந்திதா நடிக்கிறார்.

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி டைரக்டு செய்கிறார். கோ.தனஞ்செயன், லலிதா தயாரிக்கின்றனர். ராசாமதி ஒளிப்பதிவு. வைரமுத்து கு.கார்த்தி பாடல்கள் எழுத சைமன் கே.கிங் இசை அமைக்கிறார். இதில் நாசர், ஜெயபிரகாஷ், ஜே.சதிஷ்குமார், மயில்சாமி உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை மற்றும் ஐதராபாத்தில் ஒரேகட்டமாக நடந்து முடிகிறது.

Tags : Kapadatari Sibiraj ,
× RELATED டேரோட் – திரைவிமர்சனம்