×

கெங்கவல்லி அருகே நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்த மக்கள்

கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி சுவேத நதியின் குறுக்கே 2 லட்சம் மதிப்பில் பொதுமக்களே தற்காலிக பாலம் அமைத்தனர். கெங்கவல்லி ஒன்றியம், ஆணையாம்பட்டி ஊராட்சியில் தெற்கு மணக்காடு  பகுதிக்கு செல்ல, சுவேத நதியை கடந்து தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள், 700க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களை வைத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையால், சுவேத நதியில் தண்ணீர் அதிகளவில் செல்வதால், விவசாய நிலத்துக்கு செல்ல 10 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம், பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒன்று சேர்ந்து, ரூ.2 லட்சம் நிதி வசூலித்தனர்.  இதையடுத்து, ஆணையம்பட்டி ஊராட்சி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பெண்கள், பொதுமக்கள், ஊராட்சி தலைவர், துணை தலைவர், வார்டு உறுப்பினர் தலைமையில், 400 மூட்டைகளில் கிராவல் மண் அள்ளி, 12 சிமெண்ட் ரிங்க் மூலம் தற்காலிக பாலம் அமைத்தனர். இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் சென்று வரும்படி பாலத்தை அமைத்துள்ளனர். ஒரு மாத காலமாக அவதிப்பட்டு வந்த மக்கள், தற்போது தற்காலிக பாலம் அமைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழக அரசு இப்பகுதியில் சுவேதா நதிக்கரையின் குறுக்கே, சிறிய மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …

The post கெங்கவல்லி அருகே நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைத்த மக்கள் appeared first on Dinakaran.

Tags : Kenkavalli ,Kengavalli ,Kendayambatti Suveda River ,Dinakaran ,
× RELATED ஒரு கிலோ பாக்கு ₹900க்கு விற்பனை