×

கமல் படத்திலிருந்து ஆர்.ஜே.பாலாஜி விலகல்

இந்தியன் 2 படத்தில் மல்டி ஸ்டார்ஸ் இணைந்துள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், இந்தி நடிகர் அனில் கபூர், விவேக் உள்பட பலர் நடிக்கிறார்கள். இதில் காமெடி கேரக்டரில் நடிக்க ஆர்.ஜே.பாலாஜியும் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த படத்தில் நடித்தபடியே எல்கேஜி படத்துக்கு பிறகு தான் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கவும் பாலாஜி திட்டமிட்டு இருந்தார்.

இந்நிலையில் இந்தியன் 2வில் நடிக்க அதிக நாள் கால்ஷீட் கேட்டதாகவும் அந்த தேதிகள், தான் இயக்கும் பட வேலைகளை பாதிப்பதாகவும் பாலாஜி உணர்ந்திருக்கிறார். இதனால் இந்தியன் 2 படத்திலிருந்து அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக சதீஷ் இந்த கேரக்டரில் நடிக்கலாம் என தெரிகிறது.

Tags : RJ Balaji ,Kamal ,
× RELATED மருத்துவ கல்லூரி இடிந்தது போல் அரசும் உதிர்ந்து போகும்: கமல் ஆவேசம்