×

ஏலம் விட்ட காரில் மண்டை ஓடு காவல் நிலையத்தில் பரபரப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு சார்பில் கடந்த ஓராண்டுக்கு முன் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் 28 வாகனங்கள் நேற்று முறைப்படி ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதுபோல் ஏலம் எடுக்கப்பட்ட ஒரு வாகனத்தில் ஒரு மண்டை ஓடு இருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து போலீசார் கூறுகையில், அடையாளம் தெரியாத ஒரு பெண் மர்மமாக இறந்தார். அந்தப் பெண்ணைப் பற்றிய விவரத்தை சேகரிக்கவே அந்த பெண்ணின் மண்டை ஓட்டை காவல் நிலைய வளாகத்தில் இருந்த இந்த வாகனத்தில் வைத்திருந்தோம். அதுகுறித்த விசாரணை முடிந்து விட்டது. இந்த மண்டை ஓட்டில் மேற்படி எவ்வித சந்தேகங்களும் இல்லை என்றனர்….

The post ஏலம் விட்ட காரில் மண்டை ஓடு காவல் நிலையத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Skull ,Marakkanam ,Prohibition Enforcement Division ,Viluppuram District ,Marakkana ,Dinakaran ,
× RELATED கொங்கலம்மன் கோயில் வீதியில் புகையிலை...